பசுவின் வயிற்றில் இருந்த 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்

பசு மாட்டை சோதித்தபோது, அதன் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புவனேஸ்வர்,

சாலையோரம் திரியும் சில மாடுகள், குப்பை பகுதிகளில் உணவு தேடும்போது பிளாஸ்டிக் பைகளை உணவு என்று நினைத்து உட்கொள்கின்றன. உணவு வாசனை ஒட்டிக்கொண்டிருப்பதால், பிளாஸ்டிக் பைகளை அவை உட்கொள்கின்றன. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மாடுகளின் வயிற்றில் குவிந்து அவற்றின் செரிமானத்தை பாதித்து, நோயை ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில், இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மாடுகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கின்றன.

அந்த வகையில், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் தெருவில் சுற்றித்திரிந்த பசு மாடு ஒன்று கடந்த இரண்டு நாட்களாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் கத்திக்கொண்டு இருந்தது. மேலும், அதன் வயிறும் வீக்கத்துடன் காணப்பட்டது. இதனை அறிந்த கால்நடை மருத்துவர்கள், பசு மாட்டை சோதித்தபோது, அதன் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பசுவின் வயிற்றில் இருந்து சுமார் 40 கிலோ எடையுள்ள பாலிதீன் பைகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் கால்நடை மருத்துவர்கள் அகற்றினர். மாட்டிற்கு அறுவை சிகிச்சை செய்ய 3 மணி நேரம் ஆனது என தலைமை மாவட்ட கால்நடை அதிகாரி தெரிவித்தார். தற்போது அந்த மாட்டின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஒரு வாரம் மருத்துவமனையில் கண்காணிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com