ஜனநாயக நாட்டில் எந்தக் கட்சியும் 400-இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது: பிரகாஷ் ராஜ்

420 மோசடி பேர்வழிகள், வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பேசுகின்றனர் என நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை சாடியுள்ளார்.
ஜனநாயக நாட்டில் எந்தக் கட்சியும் 400-இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது: பிரகாஷ் ராஜ்
Published on

பெங்களூர்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மத்தியில் ஆளும் பா.ஜ.க., வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் தீவிரம் கட்டி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 400- இடங்களுக்கு மேல் வெல்லும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த பேச்சை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பிரகாஷ் ராஜ் கூறியதாவது: 420 மோசடி செய்தவர்கள் 400 தொகுதிகள் பற்றி பேசுகிறார்கள். ஜனநாயக நாட்டில் தனியாக ஒரு கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. நாங்கள் இத்தனை சீட்களை கைப்பற்றுவோம் என்று எந்த ஒரு அரசியல் கட்சியும் கூற முடியாது. இப்படி சொல்வது ஆணவமிக்கது" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com