

ஆமதபாத்,
பாகிஸ்தான் எல்லையையொட்டி அரபிக் கடலில் அத்துமீறி மின்பிடித்ததாக கூறி 47 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்தது. மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன . முன்னதாக, தங்கள் நாட்டு எல்லைக்குள் மீன்பிடித்ததாக கடந்த மாதம் 19-ஆம் தேதி, 17 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர். 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு கடந்த டிசம்பர் முதல் ஜனவரி வரை 292 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது.
இருநாடுகளைச் சேர்ந்த மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்படுவது அவ்ப்போது நிகழந்து வருகிறது. தங்கள் தேச எல்லையைக் கடந்து செல்கிறோம் என்பதை தெரிந்துகொள்வதற்கான எந்தவொரு தொழில்நுட்பமும் இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களிடமும் இல்லை. எனவே, இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்களை காலதாமதமின்றி இரு நாட்டு அரசுகளும் விடுதலை செய்ய வேண்டும் என்று அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன