கங்கையில் மிதந்து வந்த உடல்களை பெட்ரோல் ஊற்றி எரித்த 5 போலீஸ் ஏட்டுகள் இடை நீக்கம்

உத்தரபிரதேச மாநிலம் அருகே கங்கையில் மிதந்து வந்த உடல்களை பெட்ரோல் ஊற்றி எரித்த 5 போலீஸ் ஏட்டுகள் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கங்கையில் மிதந்து வந்த உடல்களை பெட்ரோல் ஊற்றி எரித்த 5 போலீஸ் ஏட்டுகள் இடை நீக்கம்
Published on

பல்லியா,

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா அருகே மால்தேபூர் கிராமத்தில் கங்கை ஆற்றில் இறந்தவரின் உடல் மிதந்துவந்துள்ளது. அதை கைப்பற்றிய போலீசார், சட்டமுறைப்படி செயல்படாமல், தாங்களாகவே இறந்த உடலை எரியூட்டி தகனம் செய்துள்ளனர். இதற்காக இறந்தவரின் உடலை ஒரு டயரில் கிடத்தி வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். 5 போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த நிகழ்வை யாரோ வீடியோ காட்சியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் சூப்பிரண்டின் பார்வைக்கும் இந்த வீடியோ காட்சி சென்றது.

சூப்பிரண்டு விபின் தடா கூறும்போது, போலீசார் கங்கையில் மிதந்து வந்த உடலை கைப்பற்றி இறுதிச்சடங்கு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 5 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com