சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 50 கிராம் செயின் பறிப்பு

செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 50 கிராம் செயின் பறிப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் இந்திராவதி. இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தனது வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து வந்த 2 பேர் இந்திராவதியின் கழுத்தில் கிடந்த 50 கிராம் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த இந்திராவதி, இதுகுறித்து பாகலகுண்டே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் செயின் பறிப்பு நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அது தற்போது வைரலாக பரவி வரு கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com