

புதுடெல்லி,
கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி போடும் பணிகளை மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதற்காக உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 78 கோடியே 58 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கி இருக்கிறது. அவற்றில் பயன்படுத்தியது போக மாநிலங்களின் கையிருப்பில் 5 கோடியே 16 லட்சம் டோஸ் தடுப்பூசி இருக்கிறது.
விரைவில் மாநிலங்களுக்கு மேலும் 1 கோடியே 16 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.