நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் 53 சதவீத உறுப்பினர்கள் பங்கேற்பு - ஆய்வில் தகவல்

நாடாளுமன்ற குழுக்களில் எம்.பி.க்கள் கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் 53 சதவீத உறுப்பினர்கள் பங்கேற்பு - ஆய்வில் தகவல்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசில் 16 துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதைப்போல நாடாளுமன்ற பொது கணக்குகள் கமிட்டியும் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கமிட்டிகளில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் கூட் டங்களில் ஒழுங்காக பங்கேற்பதில்லை என்பது வெளிவந்துள்ளது.

சராசரியாக 53 சதவீத உறுப்பினர்களே இதில் பங்கேற்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறைந்தபட்சம் 11 உறுப்பினர்கள் பங்கேற்றால்தான் கூட்டம் நடத்தப்படும். ஆனால் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் பலமுறை இந்த குழுக்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதம் இந்த குழுக்கள் மாற்றிய மைக்கப்பட்ட பிறகு போதிய உறுப்பினர் பங்கேற்பு இல்லாததால் 5 முறை இந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக மக்களவை இணையதளத்தில் கூறப பட்டு உள்ளது.

எனினும் ரெயில்வே, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை சார்ந்த நிலைக் குழுக்களின் கூட்டங்களில் உறுப்பினர்களின் பங்கேற்பு சீராக இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. நாடாளுமன்ற குழுக்களில் எம்.பி.க்கள் கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடியும் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com