

புதுடெல்லி,
வருகிற12ந் தேதி 57வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், இந்த கூட்டம் அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது;
புதுடெல்லியில் வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகள் பங்குபெறும் இம்மாநாட்டில் மேற்காசிய நெருக்கடியின் பொருளாதார தாக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இதன் காரணமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான 57வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் அக்டோபர் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.