கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது சோகம்... கர்நாடகாவில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது சோகம்... கர்நாடகாவில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு
Published on

ராமநகரா,

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சந்தாபுரா பகுதியைச் சேர்ந்த சிலர், சாமராஜநகரில் உள்ள மலே மகாதேஷ்வரா கோவிலில் தரிசனம் செய்துவிட்டு தங்களது காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கார், சாத்தனூர் நகருக்கு அருகில் உள்ள கெம்மலே கேட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர். அவர்களில் நாகேஷ், புட்டராஜு, ஜோதிர்லிங்கப்பா (கார் உரிமையாளர்), கோவிந்தா மற்றும் குமார் ஆகிய 5 பேர் அடையாளர் காணப்பட்டுள்ளனர். வாகனம் உருக்குலைந்த நிலையில், வாகனத்தில் இருந்த சடலங்களை போலீசார் மீட்டனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த பஸ் டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பஸ்சில் இருந்த பலர் லேசான காயம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com