

ஒடிசா மாநிலம் பாத்ராக் மாவட்டத்தில் உள்ளது பாரிகாட் கிராமம். இந்த கிராமத்தின் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்த 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 43 பேர் ஆபத்தான நிலையில் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திங்கள் அன்று தேர்தல் முடிந்ததும் அரசியல் கட்சியின் சார்பில் விருந்து வைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.