உ.பி: தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி

ஆம்னி பஸ் விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர்.
உ.பி: தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி
Published on

லக்னோ,

பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்திற்கு இன்று ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தது.

அம்மாநிலத்தின் அம்ரோஹா மாவட்டம் கொசான்கஞ்ச பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com