

புதுடெல்லி,
தென்மேற்கு டெல்லியின் தாப்ரி பகுதியில் ஒரு அரசு பள்ளி உள்ளது. இங்கு நேற்று பரிமாறப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மதிய உணவு அமைப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.