மொராதாபாத்தில் வேன் மீது லாரி மோதி பயங்கர விபத்து - 8 பேர் உயிரிழப்பு, 15 பேர் காயம்

உத்தரபிரதேசம் மாநிலம் மொராதாபாத்தில் பிக்கப் வேன் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
மொராதாபாத்தில் வேன் மீது லாரி மோதி பயங்கர விபத்து - 8 பேர் உயிரிழப்பு, 15 பேர் காயம்
Published on

மொராதாபாத்,

உத்தரபிரதேசம் மாநிலம் மொராதாபாத்தின் தல்பத்பூர்-காஷிபூர் நெடுஞ்சாலையில் பிக்கப் வேன் மீது வேகமாக வந்த லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக இன்று ஒரு குடும்பத்தினர் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிக்கப் வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பகத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தல்பத்பூர் சாலையில் கைர்காட்டா கிராமத்திற்கு அருகில் வந்த போது வேகமாக வந்த லாரி ஒன்று வேன் மீது மோதியது.

இதையடுத்து விபத்து குறித்த தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய பயணிகள் மிகுந்த சிரமத்துடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com