நாட்டில் இதுவரை 80 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 80 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 80 கோடி டோசுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த புதிய சாதனைக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். முதல் 10 கோடி டோஸ் தடுப்பூசி போடுவதற்கு 85 நாட்கள் ஆனது. ஆனால், 70 கோடி தடுப்பூசியில் இருந்து 80 கோடி தடுப்பூசி போட்டு முடிக்க வெறும் 11 நாட்கள்தான் ஆனதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com