

புதுடெல்லி,
சுதந்திரதினத்தையொட்டி தமிழகம், மேற்கு வங்காளம், கர்நாடகம் மற்றும் கேரளத்தின் புதிய முதல்-மந்திரிகள் முதல்முறையாகக் கொடியேற்றினர்.
நாட்டின் 80 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகல மாகக் கொண்டாடப்பட்டது. பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் தங்களின் தலைமைச்செயலகங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றினர்.
இந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மேற்கு வங்காளம், கேரளம் மற்றும் பதவி மாற்றம் ஏற்பட்ட கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் புதிய முதல்-மந்திரிகள் தங்களின் தலைநகரங்களில் முதல் முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின விழாவை தொடங்கி வைத்தனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, சுதந்திர நாளை முன்னிட்டு கொல்கத்தாவின் ரெட் ரோடு பகுதியில் இன்று காலை முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் புதிய முதல்-மந்திரிகளாக பதவியேற்றுள்ள டி.கே. சிவகு மார் மாநில தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியேற்றி சுதந்திர நாள் கொண்டாட்டங்களைத் தொடங்கிவைத்தார். இதே போல், கேரளத்தில் புதியதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசின் முதல்-மந்திரி வி.டி. சதீசன் திருவனந்தபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
மேலும் தமிழக முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய், கேரளம், கர்நாடகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் புதியதாக ஆட்சி அமைத்துள்ள முதல்-மந்திரிகள் சுதந்திர நாளை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி உள்ளனர். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டனர்.