டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 88 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 88 பேர் கைது
Published on

டெல்லி,

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர் மற்றும் அடையாள அட்டையுடன் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் கடந்த சில நாட்களாக தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்களுக்குமுன் டெல்லியின் நரிலா தொழிற்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் தென்மேற்கு பகுதியில் போலீசார் இன்று நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்று கைது செய்யப்பட்ட வங்காளதேசத்தினர் 88 பேரையும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com