டெல்லியில் இதுவரை 96 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு..!!

டெல்லியில் இதுவரை 96 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

புதுடெல்லி,

டெல்லி மாநகராட்சி இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, இதுவரை 96 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை, நகரில் 81 டெங்கு பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மே 14ஆம் தேதி வரை 96 டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.

நீரின் மூலம் பரவும் இந்த நோயினால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. நடபு ஆண்டில் டெல்லியில் ஜனவரி மாதம் 23 பேரும், பிப்ரவரி மாதம் 16 பேரும், மாச் மாதம் 22 பேரும், ஏப்ரல் மாதம் 20 பேரும், மே மாதத்தில் இதுவரை ஒருவரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா.

ஜனவரி 1 முதல் மே 17ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கடந்த 2021-இல் 21 பாதிப்புகளும், 2020-இல் 18 பாதிப்புகளும், 2019-இல் 10 பாதிப்புகளும், 2018-இல் 12 பாதிப்புகளும் 2017 இல் 18 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நோய் பாதிப்பு பொதுவாக ஜூலை, நவம்பா மாதங்களில் பதிவாகும். ஆனால், இந்த பாதிப்பு காலம் டிசம்பா மத்திவரை நீடிக்கலாம்.

கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற காலநிலை காரணமாக டெங்கு பாதிப்புகள் முன்கூட்டியே பதிவாகும் சூழல் நிலவுகிறது. டெல்லியில் 2019-ல் டெங்குவால் 2 பேரும், 2018-ல் நான்கு பேரும், 2017-ல் 10 பேரும் உயிரிழந்துள்ளனா. டெல்லியில் 2016-ல் 4,431ஆகவும், 2017-ல் 4,726 ஆகவும், 2018-ல் 2,798 ஆகவும், 2019-ல் 2,036 ஆகவும், 2020-ல் 1,072 ஆகவும் டெங்கு வழக்குகள் பதிவாகி இருந்தன. டெல்லியில் இந்தாண்டு இதுவரை 16 மலேரியா மற்றும் 8 சிக்குன்குனியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com