அரசு பஸ் மோதி 5 வயது குழந்தை பலி - தாய் கண்முன்னே நிகழ்ந்த சோகம்

5 வயது குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக ஆந்திரா பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
அரசு பஸ் மோதி 5 வயது குழந்தை பலி - தாய் கண்முன்னே நிகழ்ந்த சோகம்
Published on

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் ஒசக்கோட்டையில் திருமணமான பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு அவர் வெளியே சென்றார். பின்னர் அவர் ஒசக்கோட்டை புறநகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள விடுதி ஒன்றின் அருகே நின்று, சாலையை கடக்க முயன்றார்.

அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ஆந்திர அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற பெண் மற்றும் குழந்தைகள் மீது மோதியது. இதில் பெண்ணின் 5 வயது மகள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானாள். தாய் கண்முன்னே நடந்த இந்த சோகம் நெஞ்சை பதைபதைக்க வைத்தது.

மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த அந்த குழந்தையின் தாயும், இன்னொரு குழந்தையும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து ஒசகோட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திரா பஸ் டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com