துபாய்-டெல்லி விமானம் மீது பறவை மோதல்

இந்த விமானம் நாளை காலை 7 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய்-டெல்லி விமானம் மீது பறவை மோதல்
Published on: 

புதுடெல்லி

துபாயில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட எமிரேட் விமானம் மீது பறவை மோதியுள்ளது.

துபாயில் இருந்து டெல்லி நோக்கி இகே517 என்ற எண் கொண்ட எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டு வந்தது. வழியில், அதன் மீது பறவை ஒன்று மோதியுள்ளது. இதுபற்றி அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், பறவை மோதலால் விமானத்திற்கு தேவையான பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது.

ஓட்டல் வசதி

அதனால், இகே517 என்ற எண் கொண்ட எமிரேட்ஸ் விமானம் டெல்லியில் இருந்து மீண்டும் புறப்பட்டு துபாய் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, தங்குவதற்காக ஓட்டல் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த விமானம் நாளை காலை 7 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏதேனும் அசவுகரியங்கள் ஏற்பட்டால், அதற்காக எமிரேட்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது என்று தெரிவித்து உள்ளது.

எங்களுடைய பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பே அதிக முக்கியம் வாய்ந்த விசயம். அதில் சமரசம் எதுவும் மேற்கொள்ளப்படாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com