

சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் புத்லாடா நகரில் உள்ள ஐ.டி.ஐ. சந்திப்பில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் சஹஜ்பிரீத் சிங், போதையில் அங்குள்ள பொதுமக்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பொதுமக்கள் சஹஜ்பிரீத் சிங்கை சூழ்ந்து அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சஹஜ்பிரீத் சிங் சாலையில் அமர்ந்து போதையில் வாக்குவாதம் செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.