டெல்லியில் மேலும் 4,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 4,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் மேலும் 4,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி,

டெல்லியில் இன்று மேலும் 4,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,18,304 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,744 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் இன்று 3,403 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,84,748 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 28,812 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com