

கொச்சி,
16 வயது சிறுவனின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தானமாக பெறப்பட்ட இதயம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வின் சேகர் என்பவர் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவின் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சையின்போது, செல்வின் சேகர் மூளைச்சாவு அடைந்ததையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க சேகரின் குடும்பத்தினர் முன்வந்தனர்.
இந்த நிலையில் ,கொச்சியில் கார்டியோ மையோபதி நோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனுக்கு சேகரின் இதயத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்திலிருந்து கொச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் இதயம் விரைவாக கொண்டு செல்லப்பட்டு, சிறுவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.