ஒவ்வொரு முருக பக்தருக்கும் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி - பா.ஜ.க. பதிவு

தெய்வீக அருள் அனைத்து பக்தர்களையும் காத்து, துணிவு மற்றும் அறத்தின் பாதையில் வழிநடத்தட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முருக பக்தருக்கும் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி - பா.ஜ.க. பதிவு
Published on: 

புதுடெல்லி,

புனிதமான பாரம்பரியங்களை எந்தவொரு அரசியல் சதியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு முருக பக்தருக்கும் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி!

நாளை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் புனித தீபம் ஏற்ற உத்தரவிட்டிருப்பதன் மூலமும், தங்களது அரசியல் எஜமானர்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டதாகத் தமிழக அதிகாரிகளைக் கடிந்துகொண்டதன் மூலமும், இந்தியா (INDI) கூட்டணி அரசின் சனாதன விரோத மனநிலையை சுப்ரீம்கோர்ட்டு முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது.

பாரதத்தின் புனிதமான பாரம்பரியங்களை எந்தவொரு அரசியல் சதியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முருகப்பெருமானின் தெய்வீக அருள் அனைத்து பக்தர்களையும் காத்து, துணிவு மற்றும் அறத்தின் பாதையில் அவர்களை வழிநடத்தட்டும்.

வெற்றிவேல்! வீரவேல்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X