சபரிமலை சீசனை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்

சபரிமலையில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on: 

திருவனந்தபுரம்

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வருவாய் துறை மந்திரி அனில் குமார் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

சபரிமலையில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். டிசம்பர் மாதம் 27-ந் தேதி மண்டல பூஜையும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்

இந்தநிலையில், சீசனை முன்னிட்டு சபரிமலையில் செய்யப்படும் மேம்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் வருவாய் துறை மந்திரி அனில் குமார் தலைமையில் நேற்று பம்பையில் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான தலைவர் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு மந்திரி அனில் குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய இணையதளம்

நடப்பு சீசனை முன்னிட்டு சபரிமலை தொடர்பான அனைத்து விவரங்களையும் அய்யப்ப பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் sabariportaldcpta.in என்ற புதிய இணையதளம் (போர்ட்டல்) தொடங்கப்பட்டு உள்ளது. இதனை செல்போன், கம்ப்யூட்டரில் எளிதாக பயன்ப டுத்தி கொள்ளலாம். இது தவிர வாட்ஸ் அப் சார்ட் போர்ட் போன்றவையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை பயன்படுத்தி அய்யப்ப பக்தர்கள் சபரிமலை தொடர்பான அனைத்து விவரங்களையும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

அத்துடன் காணாமல் போனவர்கள் விவரங்கள், தவறவிட்ட பொருட்கள் குறித்தான விவரங்களையும் புதிய இணையதளத்தில் புகாராக பதிவு செய்யும் பட்சத்தில் அது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்பதிவு செய்யலாம்

இந்த தளத்தில் ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதேபோல் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து தொடர்பான தகவல்களையும் பெறலாம் என்று அவர் கூறினார்.

X