பிரதமர்கள் அருங்காட்சியகத்திற்கு ஒரேநாளில் 3,233 பார்வையாளர்கள் வருகை தந்து சாதனை...!

புதுடெல்லியில் உள்ள பிரதமர்களின் அருங்காட்சியகத்திற்கு ஒரேநாளில் 3,233 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
பிரதமர்கள் அருங்காட்சியகத்திற்கு ஒரேநாளில் 3,233 பார்வையாளர்கள் வருகை தந்து சாதனை...!
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் பிரதமர் பதவியை தலைவர்கள் குறித்த ஆவணங்கள், தகவல்கள், புகைப்படங்கள் அடங்கிய அருங்காட்சியகம் புதுடெல்லியின் தீன் மூர்த்தி சாலையில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நமது பிரதமர்களின் சாதனைகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதன் மூலம், இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கலாம் எனும் நோக்கத்தில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த அருங்காட்சியகத்திற்கு கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை 1,15,161 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். மேலும், சாதனை எண்ணிக்கையாக கடந்த அக்டோபர் 15-ம் தேதி ஒரே நாளில் 3,233 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com