“ஆபரேஷன் கங்கா” - சுலோவேகியாவில் இருந்து 154 இந்தியர்களுடன் டெல்லி வந்த சிறப்பு விமானம்..!!

சுலோவேகியாவில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் உக்ரைனில் சிக்கித் தவித்த 154 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது.
“ஆபரேஷன் கங்கா” - சுலோவேகியாவில் இருந்து 154 இந்தியர்களுடன் டெல்லி வந்த சிறப்பு விமானம்..!!
Published on

புதுடெல்லி,

ரஷிய படையெடுப்பின் கீழ் உள்ள உக்ரைன் நாட்டில் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கி உள்ளனர். அந்த நாட்டின் வான்பரப்பு மூடப்பட்டு விட்டதால், அங்குள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, பெலாரஸ் போன்றவற்றின் வழியாக மீட்பதற்கு மத்திய அரசு ஆபரேஷன் கங்கா திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீட்கப்பட்டு விட்டாலும், இன்னும் அங்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். மத்திய அரசின் அயராத நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன் வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், நேற்று இரவு 154 மாணவர்களுடன் சுலோவேகியா தலைநகர் கொசைசில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று அதிகாலை 5 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது. இதில் பெரும்பாலும் மாணவர்களே அடங்கியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com