கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் சின்னம்... 311 ஆண்டுகள் நிறைவு கண்ட ஸ்ரீவாரி லட்டு

கடந்த 1715-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இந்த லட்டு உள்ளது.
கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் சின்னம்... 311 ஆண்டுகள் நிறைவு கண்ட ஸ்ரீவாரி லட்டு
Published on

திருப்பதி,

உலகப் புகழ்பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலின் பிரசித்தி பெற்ற 'ஸ்ரீவாரி லட்டு' பிரசாதம், தனது 311-ஆவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் ஆகஸ்ட் 2 ஆகும். கடந்த 1715-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் பயன்பாட்டில் உள்ள இந்த திவ்யமான பிரசாதம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 'பொட்டு' என்று அழைக்கப்படும் பாரம்பரிய மடப்பள்ளியில் மிகத் தூய்மையாகவும் பக்தியுடனும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

‘காலணா’ விலையில் லட்டு

தொடக்கத்தில் பக்தர்களுக்கு பூந்தியாகவே இலவசமாக வழங்கப்பட்டு வந்த இந்த பிரசாதம், பின்னர் 1803-ஆம் ஆண்டு முதல் 'காலணா' விலையில் லட்டு வடிவில் விற்பனை செய்யும் நடைமுறைக்கு வந்தது. சுவையிலும் மணத்திலும் தனித்துவம் வாய்ந்த இந்த திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடும் (GI Tag) பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல நூற்றாண்டுகள் கடந்தும் கோடிக்கணக்கான பக்தர்களின் நாவிலும் மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ள இந்த லட்டின் பெருமையை நினைவுகூர்வதே இந்நாளின் சிறப்பம்சமாகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com