கொரோனா அறிகுறியுடன் வந்தவர் பற்றி அரசுக்கு தெரிவித்ததால் வேலை நீக்கம்: தனியார் ஆஸ்பத்திரி மீது பெண் டாக்டர் புகார்

கொரோனா அறிகுறியுடன் வந்தவர் பற்றி அரசுக்கு தெரிவித்ததால் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக, தனியார் ஆஸ்பத்திரி மீது பெண் டாக்டர் புகார் தெரிவித்துள்ளார்.
கொரோனா அறிகுறியுடன் வந்தவர் பற்றி அரசுக்கு தெரிவித்ததால் வேலை நீக்கம்: தனியார் ஆஸ்பத்திரி மீது பெண் டாக்டர் புகார்
Published on

கொச்சி,

கேரள மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு வெளிநாடு வாழ் இந்திய நோயாளி ஒருவர் கடும் காய்ச்சலுடன் வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர் ஷினு சியாமளன், கொரோனா அறிகுறிகள் இருந்ததால் நோயாளியிடம் விசாரித்தார். அப்போது அவர், தான் கத்தாரில் இருந்து வருவதாகவும், இதுபற்றி சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறினார். உடனே டாக்டர் ஷினு அவரிடம் இதுபற்றி சுகாதார துறைக்கு தெரிவிக்கும்படி கூறினார்.

அதற்கு அவர் மறுத்ததுடன், தான் கத்தாருக்கு திரும்ப இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரது உடல்நிலை பற்றி கவலைப்பட்ட டாக்டர் ஷினு, இதுபற்றி போலீஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சுகாதார அதிகாரிகள் அவரிடம் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை அறிந்து வெளிநாடு செல்ல அனுமதித்தனர். ஆனால் அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்ததற்காகவும், சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியதற்காகவும் தன்னை தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக டாக்டர் ஷினு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com