

புதுடெல்லி,
மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார். இ-ஆபீஸ் எனப்படும் அரசு பணிகள் டிஜிட்டல் மயமாக்கல், மின்னணு நிர்வாகம் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் தொலைநோக்கு திட்டம், பல்வேறு துறைகளின் 100 நாள் செயல் திட்டம், காலியிட நிலவரம், குறைதீர்ப்பு நிலவரம், பயிற்சி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில், அரசு பணிகள் டிஜிட்டல் மயமாக் கலை விரைவுபடுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார். 57 சதவீத அமைச்சகங்கள், இ-ஆபீஸ் பயன்பாட்டில் 80 சதவீத இலக்கை எட்டி உள்ளன.
சமீபத்தில், கால்நடை பராமரிப்பு துறை, பால் பண்ணை, மீன்வளம் ஆகிய துறைகளும் இந்த இலக்கை எட்டி உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.