போலீசாரை தாக்கியதாக குற்றச்சாட்டு: ராகுல் காந்தி 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

ராகுல்காந்தியை கைது செய்யும்போது கட்சியினரும், ஆதரவாளர்களும் போலீசாருடன் மல்லுக்கட்டினர்
ராகுல் காந்தி
Published on: 

டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் போராட்டத்தின்போது போலீசாரை தாக்கியதாகவும், அரசு பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் மேலும் 3 எஃப்.ஐ.ஆர்.களை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் போலீஸ் அதிகாரிகளை தாக்குதல், அரசு பணிக்கு இடையூறு ஏற்படுத்துதல், போலீசாரை தள்ளுதல் மற்றும் அவர்களுடன் முறைகேடாக நடந்து கொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பல்வேறு பிரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் போராட்டம்

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று டெல்லியில் போராட்டம் நடத்தினர். ஜந்தர் மந்தர் நோக்கி செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குண்டுக்கட்டாக கைது

தொடர்ந்து, ராகுல்காந்தியை கைது செய்யும்போது கட்சியினரும், ஆதரவாளர்களும் போலீசாருடன் மல்லுக்கட்டினர். அப்போது ராகுல்காந்தி சரிந்து விழுவது போல சென்று, சுதாரித்துக்கொண்டார். ஆதரவாளர்களிடம் இருந்து அவரை மீட்டு கைது செய்வது போலீசாருக்கு சிரமமாக இருந்தது. இதனால் அவர்கள் தங்களது முழு பலத்தையும் காண்பித்து, ராகுல் காந்தியை குண்டுக்கட்டாக தலைக்கு மேலே தூக்கி வாகனத்தில் ஏற்றினார்கள். இதேபோல் பிரியங்காகாந்தியும் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டார்.

கைதாகி விடுதலை

இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பெண் போலீசார் சிலர் மயக்கம் அடைந்தனர். வேறு சில போலீசாருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டன.கைது செய்யப்பட்டவர்கள் டெல்லி ஐ.என்.ஏ. அருகில் உள்ள சத்திரசால் மைதா னத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு ராகுல் காந்தி உள்ளிட்டோரை பார்ப்பதற்காக காங்கிரஸ் முதல்-மந்திரி கள் ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), சதீசன் (கேரளம்) மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் சென்றனர்.அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை இந்த நிலையில் சிறிது நேரத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com