

நாக்பூர்,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் இந்திய, ரஷிய நாடுகளின் கூட்டு முயற்சியில் பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் மையம் உள்ளது. இங்கு என்ஜினீயராக பணியாற்றி வரும் நிஷாந்த் அகர்வால் என்பவரை நேற்று உத்தரபிரதேசத்தில் வைத்து அந்த மாநில போலீசார் உதவியுடன் மராட்டிய பயங்கரவாத தடுப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இவர் பிரமோஸ் ஏவுகணை குறித்த தொழில் நுட்பங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டு உள்ளார். கைதான நிஷாந்த் அகர்வாலுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.