சிறையில் கணவர்... விலையுயர்ந்த ஆடை அணிந்து புகைப்படம் வெளியிட்ட நடிகர் தர்ஷன் மனைவி

ஆடை மற்றும் காலணிகள் புகழ்பெற்ற வெளிநாட்டு நிறுவனத்தை சேர்ந்தது என்று கூறப்படுகிறது.
சிறையில் கணவர்... விலையுயர்ந்த ஆடை அணிந்து புகைப்படம் வெளியிட்ட நடிகர் தர்ஷன் மனைவி
Published on

பெங்களூரு,

கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர் தனது ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் பரப்பனா அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவரது மனைவி விஜயலட்சுமி இணைய தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் மிகவும் விலையுயர்ந்த கைப்பை, பெல்ட், ஆடை மற்றும் காலணிகளை அணிந்திருப்பது, தர்ஷனின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவர் பயன்படுத்தும் கைப்பை 'லூயிஸ் விட்டான்' பிராண்டை சேர்ந்தது. அதன் மதிப்பு ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர் அணிந்துள்ள பெல்ட்டும் அதே நிறுவனத்தை சேர்ந்தது தான். அதன் மதிப்பும் சுமார் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் அவரது ஆடை மற்றும் காலணிகள் புகழ்பெற்ற வெளிநாட்டு நிறுவனத்தை சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது. கணவர் சிறையில் இருக்கும் நிலையில் இவர் இவ்வளவு ஆடம்பரமாக உடை அணிந்து, சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிடலாமா? என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் நெட்டிசன்களும், விஜயலட்சுமி வெளியிட்ட புகைப்படத்துக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com