ரூ.200 கோடி மோசடி வழக்கு: பாகுபலி பட நடிகையிடம் 2வது நாளாக விசாரணை

பாகுபலி பட நடிகை நோரா பதேஹியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று 2வது நாளாக விசாரணை நடத்தினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாகுபலி பட நடிகை நோரா பதேஹியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பணமோசடி வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவிந்தர் சிங்கை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி, சிவிந்தர் சிங் மனைவி ஆதிதி சிங்கிடம் சுகேஷ் சந்திரசேகர் சுமார் ரூ.200 கோடியை மோசடி செய்ததாக ஆதிதி சிங் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த சூழலில் தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி ரூ.200 கோடி பறித்ததாக சுகேஷ் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக நடிகை நோரா பதேஹியிடம் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com