கஜினி பட நடிகை தற்கொலை வழக்கு: நடிகர் காதலன் விடுதலை

கஜினி பட நடிகை படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
கஜினி பட நடிகை தற்கொலை வழக்கு: நடிகர் காதலன் விடுதலை
Published on

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை ஜிஹா கான் (வயது 25) . அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய தம்பதிக்கு மகளாக பிறந்த ஜிஹா கான் லண்டனில் கல்வி பயின்றார்.

பின்னர், மும்பையில் குடியேறிய ஜிஹா கான் பாலிவுட் படங்களில் நடித்தார். ராம் கோபால் வர்மாவின் நிஷாபத் திரைப்படம் மூலம் 2007-ல் அறிமுகமான ஜிஹா கான் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் வெளியான கஜினி திரைப்படத்திலும் நடித்து ஜிஹா கான் பிரபலமடைந்தார்.

இதனிடையே, 2013-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி ஜிஹா கான் மும்பையின் ஜுஹூ நகரில் தனது வீட்டில் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

ஜிஹா கான் பிணமாக மீட்கப்பட்ட நிலையில் அவர் எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் தற்கொலை செய்த நடிகை ஜிஹா கானின் காதலன் நடிகர் சுராஜ் பன்ஜொலியை 2013 ஜூன் மாதம் கைது செய்தனர். பின்னர் ஜூலை மாதம் சுராஜ் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

தனது மகளை நடிகர் சுராஜ் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக ஜிஹா கானின் தாயார் குற்றஞ்சாட்டினார். ஆனால், அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் சுராஜ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தது.

இதனிடையே, நடிகை ஜிஹா கானை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகர் சுராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு கோர்ட்டில் பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், நடிகை ஜிஹா கானை தற்கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் சுராஜ் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com