கடன் பிரச்சினை: விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து கேரள தம்பதி தற்கொலை

கடன் பிரச்சினை காரணமாக விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து கேரள தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடன் பிரச்சினை: விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து கேரள தம்பதி தற்கொலை
Published on

நாக்பூர்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரிஜு விஜயன் என்கிற விஜய் நாயர் (42 வயது). இவரது மனைவி பிரியா நாயர் (40 வயது). பிரியா மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது சிகிச்சைக்காக இருவரும் மராட்டிய மாநிலம் நாக்பூர் வந்தனர். அங்கு கஜானன் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

பிரியாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக ஒவ்வொரு வாரமும் ரூ.20 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டும் என்பதால் விஜய் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் கடனை ஜூலை 1-ந்தேதி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

இதனால் மனமுடைந்த தம்பதி நேற்று முன்தினம் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com