சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானில் வசிக்க காந்தி விரும்பினார்: எம்.ஜே.அக்பர் எழுதிய புத்தகத்தில் தகவல்

சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானில் வசிக்க காந்தி விரும்பியதாக, எம்.ஜே.அக்பர் எழுதிய புத்தகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானில் வசிக்க காந்தி விரும்பினார்: எம்.ஜே.அக்பர் எழுதிய புத்தகத்தில் தகவல்
Published on

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரியும், பத்திரிகையாளருமான எம்.ஜே.அக்பர், காந்தியின் இந்துத்துவம்: ஜின்னாவின் இஸ்லாமுக்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதில், 1940-ம் ஆண்டில் இருந்து 1947-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தலைவர்களின் கொள்கை, ஆளுமை, தவறுகள் ஆகியவற்றை விவரித்துள்ளார்.

அதில், அக்பர் கூறியிருப்பதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை காந்தி விரும்பவில்லை. இரு நாடுகளிலும் சிறுபான்மையினராக இருப்பவர்களின் கதி பற்றித்தான் அவர் உடனடியாக கவலைப்பட்டார்.

பிரிவினை நடப்பது உறுதியாக தெரிந்தவுடன், கிழக்கு பாகிஸ்தானில் உள்ள நவகாளிக்கு சென்று, மீண்டும் கலவரம் நடப்பதை தடுக்க விரும்பினார்.

1947-ம் ஆண்டு மே 31-ந் தேதி, எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கபார் கானை காந்தி அழைத்தார். எல்லை காந்தியிடம், நான் பிரிவினையை விரும்பவில்லை. பிரிவினைக்கு பிறகு, வடமேற்கு எல்லைப்புறத்துக்கு சென்று பாகிஸ்தானில் வசிக்க போகிறேன். இதற்காக யாரிடமும் அனுமதி கேட்கப்போவதில்லை. அவர்களை மீறியதற்காக என்னை கொலை செய்தாலும், சிரித்த முகத்துடன் மரணத்தை தழுவுவேன். அவர்கள் என்னை என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள் என்று காந்தி கூறினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com