ஆபரேசன் சிந்தூருக்கு பின்... மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ரூ.2.19 லட்சம் கோடியானது முதலீட்டு செலவினத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஆபரேசன் சிந்தூருக்கு பின்... மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசினார். தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் என்ற பெருமையை அது பெற்றுள்ளது.

நாடாளுமன்ற வரலாற்றில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசும்போது, அனைவருக்குமான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஆபரேசன் சிந்தூருக்கு பின்... மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்கு எதுவுமில்லை: காங்கிரஸ் தலைவர் கார்கே தாக்கு

பட்ஜெட்டில் பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீடுகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.

இதில், மத்திய அரசின் அமைச்சகங்களிலேயே பாதுகாப்பு அமைச்சகத்திற்குதான் அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர், மத்திய பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை காட்டிலும் இது 15.19 சதவீதம் அதிகம் ஆகும். அடுத்த நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 2 சதவீதம் ஆகும். இதுதவிர, மொத்த அரசு செலவினத்தில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கான மொத்த பட்ஜெட் 14.67 சதவீதம் என்பதும் கூடுதல் தகவல்.

ஆயுத படைகளை நவீனமயப்படுத்துவதுடன், தேவையான பொருட்களை வாங்க மற்றும் அவசரகாலத்தில் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வாங்கவும் இந்த மேம்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு ஈடு செய்யும். இவற்றில், ரூ.2.19 லட்சம் கோடியானது முதலீட்டு செலவினத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இது, 2025-26 நிதியாண்டில் ரூ.1.80 லட்சம் கோடியாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com