பள்ளியை தொடர்ந்து மும்பையில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பையில் கல்லூரிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியை தொடர்ந்து மும்பையில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

மும்பை,

கடந்த சில நாட்களாக பள்ளிகள், விமான நிலையங்கள், விமானங்கள் உள்பட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், மராட்டிய மாநிலம் மும்பையின் கண்டிவலி மேற்கில் உள்ள ஒரு கல்லூரிக்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து அந்த கல்லூரிக்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கல்லூரியில் மேற்கொண்ட சோதனையில் தற்போது வரை சந்தேகத்திற்கிடமான வகையில் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த 23ம் தேதி மும்பையின் ஜோகேஷ்வரி-ஓஷிவாரா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கடந்த மாதம் டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை நடத்தி, வெடிகுண்டு மிரட்டல் புரளி எனக் கண்டறிந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com