

புதுச்சேரி,
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில், நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் தொடங்கி 10-ந் தேதி வரை (அக்னி வீரர்கள்) ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது.
இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத் தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களும் பங்கேற்க உள்ளனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 17 வயது முதல் 21 வயது பூர்த்தியான தகுதியான இளைஞர்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்துள்ளவர்கள் மட்டும் தினமும் சுமார் 1,000 பேர் வீதம் வரவழைக்கப்பட்டு, அவர்க ளுக்கு உடல் தகுதி தேர்வு, உடல் அளவீட்டு தேர்வுகள், மருத்துவ பரிசோதனைகள் நடத்தப் பட உள்ளது. இதையொட்டி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தை சீரமைத்தல், பந்தல் அமைத்தல், நீளம், உயரம் தாண்ட இடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை ராணுவத்தினர் செய்து வருகின்றனர்.