மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் தாக்கல்

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன.
மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் தாக்கல்
Published on

புதுடெல்லி,

விவசாயிகளுக்கான உற்பத்தி வாத்தக மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா, விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய அந்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், தற்போது மாநிலங்களவைக்கு வந்தன. அந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை, பெருநிறுவனங்களுக்கு ஆதரவானவை என்று குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள் ஒன்றாகத் திரண்டு அவற்றை எதிர்த்தன.

இந்நிலையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com