நடுவானில் திடீரென குலுங்கிய ஏர் இந்தியா விமானம்; 20 பயணிகள் காயம்

விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
நடுவானில் திடீரென குலுங்கிய ஏர் இந்தியா விமானம்; 20 பயணிகள் காயம்
Published on

டெல்லி,

தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து இன்று இந்தியாவின் டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

20 பயணிகள் காயம்

நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானம் குலுங்கியது. இதனால் சில பயணிகள் முன்னால் உள்ள இருக்கைகள் மோது மோதினர். மேலும், பயணிகள் பலரும் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். இந்த சம்பவத்தில் 20 பயணிகள் லேசான காயமடைந்தனர்.

அதேவேளை, விமானம் டெல்லியில் பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து, காயமடைந்த 20 பயணிகளுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com