எஞ்சின் கோளாறு: டெல்லியில் அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா விமானத்தில் 335 பேர் பயணித்தனர்.
எஞ்சின் கோளாறு: டெல்லியில் அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
Published on

டெல்லி,

தலைநகர் டெல்லியில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு இன்று காலை ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 335 பேர் பயணித்தனர். இந்நிலையில், விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கினார்.

இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளை, விமான பயணம் கால தாமதம் ஏற்பட்டதால் பயணிகளை மாற்று விமானம் மூலம் மீண்டும் மும்பைக்கு அனுப்பி வைக்க ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com