டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு; 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் பாடம்

காசியாபாத், நொய்டா, குருகிராம், பரிதாபாத் மற்றும் சோனிபட் ஆகிய நகரங்களிலும் இந்த 3-ம் நிலை செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு; 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் பாடம்
Published on: 

புதுடெல்லி

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால், 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் குளிர்கால காற்று மாசு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாசு தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியுள்ளது. மாசு தடுப்பு நடவடிக்கையில் ஏற்கனவே முதல் மற்றும் 2-ம் நிலை செயல்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. கட்டுமான பணிகள், விறகு அடுப்பு மற்றும் ஜெனரேட்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாசு மேலும் அதிகரித்து இருப்பதால் மாசு தடுப்பு 3-ம் நிலை செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஆன்லைன் வகுப்பு

டெல்லி மட்டுமல்லாது பிராந்திய நகரங்களான காசியாபாத், நொய்டா, குருகிராம், பரிதாபாத் மற்றும் சோனிபட் ஆகிய நகரங்களிலும் இந்த 3-ம் நிலை செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த செயல் திட்டத்தின்படி 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலப்பு முறை வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதாவது மாணவர்கள் நேரிலும், ஆன்லைனிலும் வகுப்பை கவனித்து கொள்ளலாம். வீடுகளில் இணைய வசதி உள்ள மாணவர்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாக வகுப்பறை நிகழ்வில் பங்கேற்கலாம். இணைய வசதி இல்லாதவர்கள் வகுப்புக்கு நேரடியாக செல்ல வேண்டும். இணைய வசதி இருந்தும் வகுப்புக்கு நேரடியாக செல்ல விரும்பினால் செல்லலாம்.

X