உணவகமாக மாறிய விமானம் !

குஜராத் மாநிலத்தில் விமானத்தை ஓட்டலாக மாற்றி வடிவமைத்து அசத்தியுள்ளனர்.
உணவகமாக மாறிய விமானம் !
Published on

வதோதரா,

குஜராத் மாநிலம் வதோதராவில் விமானத்தை ஓட்டலாக மாற்றி வடிவமைத்துள்ளனர். இதற்காக பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஏர்பஸ்-320 ரக விமானம் ஒன்று வாங்கப்பட்டது. விமானத்தின் ஒவ்வொரு பாகமும் வதோதராவுக்கு கொண்டு வரப்பட்டு ஓட்டலாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து ஓட்டலின் நிர்வாக இயக்குநர் முகி கூறுகையில், வாடிக்கையாளர்கள் இந்த உணவகத்துக்குள் வரும் போது, நிஜ விமானத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இங்கு பஞ்சாபி, சைனீஸ், இத்தாலியன், மெக்சிகன், தாய், காண்டினெண்டல் உட்பட பல்வேறு வகையான உணவு வகைகள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இங்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு, விமானத்தில் இருப்பது போன்றே டிக்கெட் ஒன்று கொடுக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 106 பேர் வரை இங்கு அமர்ந்து உணவருந்தலாம். இங்குள்ள ஊழியர்கள் விமான பணியாளர்கள் போல உடையணிந்து பணியாற்றுகின்றனர் என்பன போன்ற விஷயங்கள் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com