10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்கவையே: ரிசர்வ் வங்கி விளக்கம்

புழக்கத்தில் உள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கவையே என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. #RBI #tamilnews
10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்கவையே: ரிசர்வ் வங்கி விளக்கம்
Published on

மும்பை,

ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மத்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தகவலை தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 ரூபாய் நாணயங்களின் உண்மைத்தன்மை குறித்து வர்த்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளதாகவும், அவற்றை பெற தயக்கம் காட்டுவதாக எங்கள் கவனத்துக்கு தெரியவந்துள்ளது.10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியால் 14 வகையான ரூ.10 நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அரசின் பல்வேறு திட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலும் சமூக கலாச்சார மதிப்புகள் அடிப்படையில் அவ்வப்போது புதிய வகையிலான 10 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன. #RBI #tamilnews

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com