நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான சொத்துகள் அனைத்தும் ஏலம்

கடத்தல்காரர்கள் மற்றும் அந்நியச் செலாவணி மோசடி செய்பவர்கள் சட்டத்தின் கீழ் இந்த ஏலம் நடந்தது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான சொத்துகள் அனைத்தும் ஏலம்
Published on

கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். 700 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். மும்பையில் இவருக்கு சொந்தமாக உள்ள சொத்துகள்,

அனைத்தையும் மத்திய அரசு பறிமுதல் செய்து ஏலத்தில் விட்டு வருகிறது. அந்த வகையில், தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமாக மராட்டிய மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மும்பகே கிராமத்தில் நான்கு விவசாய நிலங்கள் இருந்தன. இந்த இடம் மட்டும் ஏலத்தில் விடப்படாமல் இருந்தது.

இந்த நிலங்கள் தாவூத் இப்ராகிமின் தாயார் அமீனா பீவி பெயரில் இருந்தன. இந்த சொத்துகளை பல்வேறு முறை ஏலத்தில் விட மத்திய அரசு முயற்சி செய்தது. இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் சொத்துகளின் மதிப்பை 30 சதவீதம் குறைக்கப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களினால் இந்த நிலங்கள் விற்பனை ஆகாமல் இருந்தது.

இந்த சூழலில் தற்போது இந்த நிலங்கள் இன்று மீண்டும் ஏலத்தில் விட்டது. கடத்தல்காரர்கள் மற்றும் அந்நியச் செலாவணி மோசடி செய்பவர்கள் சட்டத்தின் கீழ் இந்த ஏலம் நடந்தது. இதில் தாவுத் இப்ராகின் சொத்துகள் அனைத்தும் ஏலத்தில் விடப்பட்டன. சொத்துகள் அனைத்தையும் மும்பையை சேர்ந்தவர்களே ஏலத்தில் எடுத்தனர். இந்த நிலங்களை ஏலத்தில் எடுத்தவர்கள் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பணத்தை செலுத்திய பிறகு, நிலம் அவர்களுக்கு சொந்தமாக மாறும்

X

Daily Thanthi
www.dailythanthi.com