பி.எப்.ஐ அமைப்பை போன்றே ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும்- லாலு பிரசாத் கோரிக்கை

ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்து விசாரணை நடத்த வேண்டும் என லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
Image Courtesy: PTI 
Image Courtesy: PTI 
Published on

பாட்னா,

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ள மத்திய அரசு, அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத், பி.எப்.ஐ அமைப்பை போன்றே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தையும் (ஆர்எஸ்எஸ்) தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீதான மத்திய அரசின் தடை குறித்து பேசிய அவர், "பிஎப்ஐ -விட மோசமான அமைப்பு ஆர்எஸ்எஸ். முதலில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பிஎப்ஐ போன்ற அனைத்து அமைப்புகளையும் தடை செய்து விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்தார்.

பாஜக அரசை விமர்சித்த லாலு பிரசாத், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் காரணமாக நாட்டின் நிலைமை மோசமாகிவிட்டதாக தெரிவித்தார். நாட்டில் மதவெறியைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அத்தகைய அரசை தூக்கி எறிய வேண்டும் எனவும் லாலு பிரசாத் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com