அமர்நாத் யாத்திரை 3.40 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

அமர்நாத் யாத்திரை ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
அமர்நாத் யாத்திரை 3.40 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்
Published on

ஜம்மு,

காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்கும் அமர்நாத் யாத்திரை கடந்த 2-ந் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி வரை 38 நாட்கள் யாத்திரை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் ஜம்முவின் பகவதி நகர் முகாமில் இருந்து 2 ஆயிரத்து 704 ஆண்கள், 675 பெண்கள், 12 குழந்தைகள் மற்றும் 109 சாதுக்கள் என 3 ஆயிரத்து 500 பக்தர்கள் கொண்ட 22-வது குழு பாதுகாப்புடன் இன்று புறப்பட்டு சென்றது. 95 வாகனங்களில் 2 ஆயிரத்து 668 பக்தர்கள் பஹல்காம் பாதை வழியாகவும், 45 வாகனங்களில் 832 பக்தர்கள் பால்டா பாதை வழியாகவும் சென்றனர்.

ஜம்மு அடிப்படை முகாமில் இருந்து மட்டும் இதுவரை 1.33 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசிக்க சென்று உள்ளனர். இதுவரை மொத்தம் 3.40 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்து இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com