சர்ச்சைகளுக்கு இடையில் மோடி நாளை விவேகானந்தர் விழாவில் உரையாற்றுகிறார்

விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது வருட கொண்டாட்டத்தின் போது பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
சர்ச்சைகளுக்கு இடையில் மோடி நாளை விவேகானந்தர் விழாவில் உரையாற்றுகிறார்
Published on

புதுடெல்லி

பிரதமர் உரையாற்றுவது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி மாணவர் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இது பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது நினைவை முன்னிட்டு நடத்தப்படுகிறது.

இக்கூட்டத்தில் மோடி உரையாற்றுவதும், அதை நேரலையாக காட்டுவதும் சர்ச்சையாகி உள்ளது. பிரதமரின் உரையை காணும்படி 40,000 நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய குழுவும், மத்திய அரசும் கேட்டுக்கொண்டுள்ளன. ஆனால் மேற்கு வங்க அரசு இந்த உரையை புறக்கணிக்கும்படி கோரியுள்ளது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் இவ்வாறு நேரலை செய்வது தவறு என்றும், காவிமயமாக்கலின் ஒரு பகுதியாகவே இவ்வாறு செய்யப்படுகிறது என்றும் மேற்கு வங்க ஆளும் திரிணமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது.

நாட்டில் வேலையின்மை, விவசாயிகளின் தற்கொலை, பணமதிப்புநீக்க பாதிப்புகள் போன்றவை இருக்கும்போது இவ்வாறு உரை நிகழ்த்துவது திசை திருப்பும் நடவடிக்கை என்றார் அக்கட்சியின் தலைவர் ஓ பிரையன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com