மக்களவையில் அமித்ஷா- காங்கிரஸ் எம்.பி வேணுகோபால் இடையே காரசார வாதம்

அமித்ஷா அடிக்கடி குறுக்கீடு செய்து பேசியதால், “வார்த்தைக்கு வார்த்தை குறுக்கீடு ஏன்? என்று கேசி வேணுகோபால் கேள்வி எழுப்பினார்.
மக்களவையில்  அமித்ஷா- காங்கிரஸ் எம்.பி வேணுகோபால் இடையே காரசார வாதம்
Published on

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தாக்கல் செய்ய நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் இன்று கூடியது. மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி வேணுகோபால், இந்திய அரசியல் சாசனம் முழுமையாக ஒருதரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ளது” என்றார். அப்போது, குறுக்கிட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும் கட்டத்தில் அவற்றின் உள்ளடக்கத்தை கேள்வி எழுப்ப முடியாது.

மசோதா அறிமுகத்தில் ஏதேனும் குறைகளைக் குறித்து மட்டுமே வேணுகோபால் கேள்வி எழுப்ப முடியும். விவாதத்தின் போது எதிர்க்கட்சிளுக்கு, அரசு வலுவான பதில்அளிக்கும்”என்றார்.

அமித்ஷா அடிக்கடி குறுக்கீடு செய்து பேசியதால், “வார்த்தைக்கு வார்த்தை குறுக்கீடு ஏன்?” என வேணுகோபால் காட்டமாக கேள்வி எழுப்பினர். இதனால் அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com